அல்-அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட இரத்த தான முகாம் சேவையை பாராட்டி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கி சார்பில் பாராட்டு சான்றிதழ் கடந்த வியாழனன்று (13 /01 /2011 ) அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியில் வழங்கப்பட்டது. இச்சான்றிதழை அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் அல்-அய்ன் மண்டல தமுமுக செயலாளர் சகோ மண்ணை ஹாஜா மைதீன் ஆகியோர் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர்.
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால்இ நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்' கூறுகிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோதுஇ நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துஇ ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன்.