அஸ்ஸலாமு அலைக்கும் ஆவணியாபுரம் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது இந்த இணயதளத்தில் உங்கள் திருமணம் வாழ்த்துக்கள் மற்றும் ஊரில் நடக்கும் நிகழ்சிகளும் வெளி இடப்படும் அனுப்ப வேண்டிய இ-மெயில் : deen788@gmail.com

Sunday, January 16, 2011

அல்-அய்ன் மண்டல தமுமுக-விற்கு பாராட்டுச் சான்றிதழ்

அல்-அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட இரத்த தான முகாம் சேவையை பாராட்டி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கி சார்பில் பாராட்டு சான்றிதழ் கடந்த வியாழனன்று (13 /01 /2011 ) அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியில் வழங்கப்பட்டது. இச்சான்றிதழை அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் அல்-அய்ன் மண்டல தமுமுக செயலாளர் சகோ மண்ணை ஹாஜா மைதீன் ஆகியோர் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர்.
http://lalpetexpress.com/

Friday, January 7, 2011

A.H.முஹம்மது புஹாரி - அஸ்கர் நிஷா



பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅபைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்…ஆவணியாபுரம் இணயதளம்

Sunday, January 2, 2011

இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை !

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:

''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால்இ நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்' கூறுகிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோதுஇ நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துஇ ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன்.

Tuesday, November 30, 2010

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்

இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: -
‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி

Monday, November 22, 2010

இஸ்லாமிய பார்வையில் கிண்டலும் கேலியும்

தொகுப்பு  : முஹம்மது ஆரிப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாதுல்லாஹி வ பரகதுஹூ 
பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மான் னிர்ரஹீம்
  • பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது
  • பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது
  • போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
  • ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது
  • ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது
  • இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மட்டுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.

Saturday, November 13, 2010

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.